ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராக அமீரகத்திற்கு அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவு அளிப்பதாக தெரவித்தது.
அதன் எதிரொலியாக, வர்ஜீனியாவில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆறு அமெரிக்க F-22 போர் விமானங்கள் சனிக்கிழமை அமீரக தலைநகர் அபுதாபியை வந்தடைந்தன.
அபுதாபியின் அல்-தஃப்ரா விமான தளத்தில் 6 ராப்டார் ஜெட் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 2,000 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன. ஜனவரி மாதம் முழுவதும் அமீரகம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல் காரணமாக அமெரிக்க ஆதரவு அளிப்பதாகவும், அதில் இது ஒரு பகுதியாகும் என்றும் அமெரிக்க விமானப்படை மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜெட் விமானங்கள் ஸ்பெயினில் உள்ள மோரோன் விமான தளம் வழியாக அபுதாபி வந்ததாக கூறப்படுகிறது, இந்த தளம் நிரந்தரமான அமெரிக்காவினுடையதாகும், மேலும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அமீரகம் கடற்படையுடன் இணைந்து செயல்பட ஏவுகணைகளை அழிக்கும் யு.எஸ்.எஸ் கோலான ஏவுகணை கப்பலான அமெரிக்க கடற்படை அனுப்பியுள்ளது.
போர் விமானங்களும், போர்க் கப்பல்களும் அபுதாபியில் நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் முன்னெச்சரிக்கைக்காக உளவுத்துறை தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.