உலகின் மிக வேகமான மனிதர் என்றழைக்கப்படும் உசேன் போல்ட் அமீரகம் வந்திருக்கிறார். அல் நூர் ஊனமுற்றவர்களுக்கான மறுவாழ்வு மையத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் இன்று துபாய் எக்ஸ்போவில் நடைபெற்ற ஃபேமிலி ரன் போட்டியில் உசேன் போல்ட் கலந்துகொண்டார்.
1.45 கிலோமீட்டர் நீளமுள்ள டிராக்கில் அவருடன் அவரது ரசிகர்கள் பலரும் இப்போட்டியில் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளி மக்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் உசேன் போல்ட் இந்த போட்டியில் கலந்துகொள்வதாக சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் முடிவடைந்ததும் தனது ரசிகர்களுடன் போல்ட் செல்பி எடுத்துக்கொண்டார்.
The world’s fastest sprinter Usain Bolt at the Expo 2020! #UsainBolt #Expo2020 #Dubai #UAE
pic.twitter.com/yVMU7fnRdX— Camil Tahan (@Cam1lTahan) November 13, 2021
