வேலைக்காக துபாய் வரும் தமிழர்களின் முதல் கவலை வீடு பற்றிய சிந்தனை தான். புது நாடு, புதிய இடம், முற்றலும் புதிய மொழி என சற்றே ஸ்தம்பித்து விடுவார்கள். கள யதார்த்தம் பழகிய பின்னர் சாப்பாட்டுப் பிரச்சினை பெரிய பிரச்சினையாகத் தோன்றும்.
சாக்ஸில் ரத்தம் வரும் வரையில் உழைத்துவிட்டு ரூமிற்குத் திரும்பிய உடன், சமையல் செய்ய வேண்டும். சமைத்து சாப்பிட்டு தூங்கினால், அடுத்தநாள் காலை மீண்டும் எழுந்து ஓடவேண்டும். வேலை – சமையல் – தூக்கம் ரிப்பீட்டு இதுதான் அமீரக வாழ் தமிழர்களின் வாழ்க்கை.
இப்படியான சிரமங்களுக்கு இடையே தவிக்கும் மக்களுக்காகவே துபாய்க்கு வந்திருக்கிறது வாடிவாசல் மெஸ். சாப்பாடு முழுவதும் நம்ம ஊர் ஐட்டங்கள். அதுவும் நம்ம பட்ஜெட்டில். துபாயின் ஹோர் அல் அன்ஸ் பகுதியில், அபூபக்கர் அல் சித்திக் மெட்ரோ ஸ்டேஷன் எக்ஸிட் 2 விற்கு அருகில் மிஸ்டர் பிரியாணி ரெஸ்டாரண்டில் வாடிவாசல் மெஸ் அமைந்துள்ளது.
முன்பணம் கொடுத்து பதிவு செய்தபிறகு மாதம் முழுமைக்குமான உங்களுடைய உணவுக் கவலையை வாடிவாசல் மெஸ்ஸிடம் விட்டுவிடுங்கள். தினந்தோறும் உங்களுக்கான உணவுகளை நீங்களே நேரடியாக சென்று வாங்கிக்கொண்டால் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.
டோர் டெலிவரி வசதியும் இங்கே உங்களுக்குக் கிடைக்கிறது. ஹோர் அல் அன்ஸ், சத்வா, துபாய் இன்வெஸ்ட்மெண்ட் பார்க் (DIP) மற்றும் அல் கூஸ் பகுதியில் வசிப்பவர்கள் மாதம் முழுமைக்கும் உங்களுடைய உணவுகளை டோர் டெலிவரி மூலமாக இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒருவேளை நீங்கள் துபாயின் பிற பகுதிகளில் வசிப்பவராக இருந்தால் குறைந்தபட்சம் 10 பார்சல்கள் இருந்தால் மட்டுமே டோர் டெலிவரி இலவசமாக செய்யப்படும்
உணவுக் கட்டண விபரம்:
வேளை | கட்டணம் (திர்ஹம்ஸில்) |
காலை மட்டும் | 130 |
இரவு மட்டும் | 150 |
காலை மற்றும் இரவு | 240 |
மதியம் | 200 |
மதியம் & காலை அல்லது இரவு | 260 |
மூன்று வேளையும் | 350 |
கட்டணம் எல்லாம் சரி, என்னென்ன உணவுகள் கிடைக்கும் என நீங்கள் கேட்பது புரிகிறது. விதவிதமான சைவ மற்றும் அசைவ உணவுகள் உங்களுக்கு இங்கே கிடைக்கின்றன. உண்மைதான். கீழே பட்டியலே கொடுத்துள்ளோம். பாத்துட்டு வாங்க.
தொடர்புக்கு : 0521552112, 0524430037
அமைவிடம்
இனி, சமையல் செய்ய வேண்டிய கஷ்டமோ, அதிக விலைகொடுத்து உணவு வாங்கவேண்டிய கவலையோ உங்களுக்கு இல்லை. இன்றே வாடிவாசலைத் தொடர்புகொள்ளுங்கள்..