UAE Tamil Web

பள்ளி செல்லும் 16+ மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் – அமீரக கல்வி அமைச்சகம் உத்தரவு!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அமீரக கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரிதும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அதற்கேற்றாற்போல தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அண்மையில் 3 – 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு சினோஃபார்ம் தடுப்பூசிகளை செலுத்துவதற்கான அங்கீகாரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்திருந்தது. மேலும் சோதனை முயற்சியாக 900 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்த நிலையில் அமீரகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி மற்றும் கல்விக்கூடங்களுக்கு திரும்புவதற்கு முன் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 16 மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு மட்டும் இந்த உத்தரவு பொருந்தும்.

UAE: Major changes announced for 33 public schools in Abu Dhabi - News | Khaleej Times
Credit : Khaleej Times

தனி கல்வி அமைப்பின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு இந்த உத்தரவு செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு திரும்பும் மாணவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல கல்விக்கூடங்களில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பணி செய்யும் ஊழியர்கள், பெற்றோர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஏதேனும் மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத பட்சத்தில் அதற்கான மருத்துவச் சான்றை வைத்திருந்தால் மட்டுமே கல்விக்கூடங்களில் நுழைய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link