UAE Tamil Web

அமீரகம்.. டயர் வெடித்ததால் “சாலையில் தறிகெட்டு ஓடிய வேன்”.. எச்சரிக்கை விடுத்த அபுதாபி போலீசார் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

இன்று அபுதாபி காவல்துறை தங்களது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று, அமீரக சாலைகளில் தேய்ந்து போன டயர்கள் கொண்டு வாகனம் ஓட்டுவதால் எந்தவகை ஆபத்தை வாகன ஓட்டிகள் சந்திக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அமீரகத்தில் இரு வேறு இடங்களில் இதுபோன்ற விபத்துகள் நடந்துள்ளது, இந்நிலையில் விபத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள், தங்கள் வண்டியின் டயர்களின் நிலையை சரிபார்க்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். போலீசார் அறிவுறுத்தலின்படி அவர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், டயர் வெடித்து விபத்துக்களை ஏற்படுத்தும் விரிசல்கள் பற்றியது தான்.

தற்போது வெயில் காலம் என்பதால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, சேதமடைந்த அல்லது தேய்ந்து போன டயர்களுடன் வாகனம் ஓட்டி பிடிபட்ட வாகன ஓட்டிகளுக்கு 4 Black Pointsகளுடன் 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்திருந்தது நினைவுகூரத்தக்கது. மேலும் அந்த வாகனங்கள் ஒரு வாரம் ஜப்தி செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்கள் கவிழ்வதற்கு, பயன்படுத்தத் தகுதியற்ற டயர்களே முக்கியக் காரணம் என்று காவல்துறை அறிக்கைகள் முன்பு தெரிவித்தன. பழைய டயர்களை வாங்குவதற்கு எதிராக அதிகாரிகள் முன்பு குடியிருப்பாளர்களை எச்சரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செலவிற்கு பயந்து தேய்ந்துபோன டயர்களை பயன்படுத்துவதால் அது மிகப்பெரிய விபரீதங்களை ஏற்படுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap