34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் வந்தே பாரத் மிஷனின் நான்காம் பகுதியின் விமான டிக்கெட் விற்பனை தொடக்கம்..!

Repatriation-flights-from-UAE-to-India-_

அபுதாபியிலுள்ள இந்திய தூதரகம், அல்லது துபாயிலுள்ள இந்திய துணை தூதரகம் ஆகியவற்றின் இணையதளத்தில் பதிவுசெய்து, நுழைவிற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்த எந்தவொரு இந்தியரும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தே பாரத் மிஷனின் நான்காம் பகுதி விமானங்கள் மூலம் தாயகம் திரும்புவதற்கான டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் விற்பனை பின்வரும் முகவர்கள் மூலம் நடைபெறுகிறது.

  1. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் (www.airindiaexpress.in) வாயிலாக டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
  2. அபுதாபி, அல் அய்ன், துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா, புஜைரா மற்றும் அஜ்மான் ஆகிய இடங்களில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முன்பதிவு அலுவலகம் (M / s அரேபிய டிராவல் ஏஜென்சியால் நிர்வகிக்கப்படும் பொது விற்பனை முகவர்கள் மூலம்).
  3. அமீரகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிக்கெட் முகவர்கள்.

அமீரகத்தில் வந்தே பாரத் நான்காம் பகுதியின் கீழ் ஜூலை 3 முதல் ஜூலை 14 வரை இயங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான டிக்கெட் விற்பனையானது 28 ஜூன் 2020 (இன்று) இரவு 7 மணி முதல் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் விமானத்தின் டிக்கெட் தள்ளுபடி விலை குறித்த எவ்வித தகவல்களும் தெளிவாக வெளியிடப்படவில்லை.

வந்தே பாரத் நான்காம் பகுதி குறித்த மேலும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க.!