37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

அமீரகத்திலிருந்து இந்தியா செல்லும் 5 சிறப்பு விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு துவக்கம்..!

emiratesjan

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு இயக்கப்பட இருக்கும் 5 சிறப்பு விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு துவங்குவதாக துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

பயணிக்க விரும்பும் மக்கள் ஏர் இந்தியாவின் இணையதளத்திலோ, அல்லது ஏர் இந்தியா டிக்கெட் முன்பதிவு அலுவலகங்களிலோ தங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம். துணைத் தூதரகத்தின் இந்த டிவிட்டர் செய்தியில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிக்கெட் விற்பனை துவங்க இருக்கும் விமானங்களின் பயண விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வ.எண் பயண தேதி புறப்படும் இடம் செல்லும் இடம்
1 11 ஜூலை, 2020 துபாய் புதுதில்லி
2 12 ஜூலை, 2020 ஷார்ஜா இந்தூர்
3 12 ஜூலை, 2020 ஷார்ஜா ஸ்ரீநகர்
4 13 ஜூலை, 2020 ஷார்ஜா சண்டிகர்
5 14 ஜூலை, 2020 ஷார்ஜா அகமதாபாத்

இதையும் படிங்க.!