UAE Tamil Web

மேம்பாலத்தில் பற்றிஎரிந்த மினி பஸ் – துபாயில் பரபரப்பு..!

Bus-fire-

வெயில் அமீரகத்தை புரட்டி எடுத்துவரும் வேளையில், இதன்காரணமாக ஆங்காங்கே வாகனங்கள் தீ விபத்தை சந்திப்பது வழக்கமாகி வருகிறது. துபாயில் நேற்று உம் சகேம் சாலையில் சென்று கொண்டிருந்த மினிபஸ் ஒன்று திடீரென தீப்பிடித்ததால், சக வாகன ஓட்டுனர்கள் பீதியடைந்தனர்.

அல் பர்ஷா மேம்பாலத்தின் தென்பகுதியில் ஷேக் முகமது பின் சயீத் சாலைக்குச் செல்லும் வழியில் இந்த வாகனம் தீக்கு இரையாகியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனால், அந்தப் பகுதிகளில் சில மணி நேரங்களுக்கு போக்குவரத்து தடைபட்டதாக துபாய் காவல்துறை தெரிவித்தது.

Bus-fire-
2 Shares
Share via
Copy link