அபுதாபி முஷாஃபா தொழில்துறை பகுதியில் உள்ள கேரவன்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்துக் குறித்து தகவலறிந்த அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபி சிவில் டிஃபென்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.