UAE Tamil Web

துபாய்வாழ் இந்தியத் தொழிலதிபரும் மலபார் குழும இணை நிறுவனருமான இப்ராஹீம் ஹாஜி காலமானார்..!

HAJI

துபாயில் வசித்துவந்த மலபார் குழுமத்தின் இணை நிறுவனரும் PACE கல்விக் குழுமத்தின் தலைவருமான டாக்டர். பிஏ இப்ராஹீம் ஹாஜி இன்று (டிசம்பர் 21) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

துபாயில் வசித்துவந்த ஹாஜி அவர்களுக்கு கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு நேற்று (டிசம்பர் 20) மருத்துவ விமானம் மூலமாக கோழிக்கோட்டில் உள்ள MIMS மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் ஹாஜி.

அங்கே சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்திருக்கிறது. இதற்கு முன்பே, தன்னுடைய இறுதிக்காலத்தில் இந்தியாவில் இருக்கவேண்டும் என ஹாஜி தனது நெருங்கிய உறவினர்களிடத்தில் தெரிவித்திருக்கிறார்.

கோழிக்கோட்டில் உள்ள இல்லத்தில் இன்று மாலை 4 மணிவரையில் அவரது உடல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பார்வைக்காக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு பைபாஸ் சாலையில் உள்ள PA காம்ப்ளெக்சில் அவருக்காக ஜனாஸா தொழுகை நடைபெறும் எனவும் வெட்டிகோடு நஜ்முல் ஹுதா மதராஸா மஞ்சேரியில் அவருடைய இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 வருடம் துபாயில் வசித்த ஹாஜி இந்துஸ் மோட்டார் கம்பெனியின் துணைத் தலைவராகவும் மலபார் கோல்ட் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் முதலீட்டாளராகவும் ஹாஜி இருந்தார்.

மத, இன பேதம் கடந்து பல்வேறு வகையான மக்களுக்கு உதவும் உள்ளங் கொண்டவராக அறியப்படும் ஹாஜி அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

HAJI
3 Shares
Share via
Copy link