UAE Tamil Web

81 வருடங்களாக துபாயில் இயங்கிவரும் ஸ்ரீ கிருஷ்ணா கோவில்..!

KRISHNA-TEMPLE-ARAMZAN-

சகிப்புத் தன்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் அமீரகத்தில் 1935 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கிருஷ்ணர் கோவில் இன்றும் அமீரக வாழ் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வருடம் முழுவதும் ஏராளமான நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்று வருகின்றன. கொரோனா காலத்திற்கு முன்பு ஒரு நாளைக்கு சராசரியாக 3000 பேர் இந்த கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.

NAT-210801-KRISHNA-TEMPLE-ARAMZAN-9
Image Credit: Gulf News

தமிழ் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் 6000 முதல் பத்தாயிரம் பேர் வரையில் மக்கள் இங்கே கூடுகிறார்கள். இந்த கோவிலின் தலைவர் லலித் கராணி இந்த கோவில் முன்னர் ஒரு வீடாக இருந்ததாகவும் பின்னர் கோவிலாக மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் கோவிலுக்கு எனத் தனியாக இணையதளம் ஒன்றினை துவங்க இருப்பதாகவும் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள், பூஜை நேரங்கள் ஆகியவை இந்த இணையதளம் மூலமாக மக்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் அதாவது 1900 ஆண்டுகளில் துபாய்க்கு வியாபாரம் செய்ய வந்த இந்தியர்களால் இந்த கோவில் சிறிய அளவில் உருவாக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்திய மக்கள் பெருமளவில் புர் துபாய் பகுதியில் வசிக்கத் தொடங்கினர். அனைவருமே வியாபாரத்தை பூர்வ தொழிலாகக் கொண்டவர்கள்.

இம்மக்கள் தங்களுடைய வழிபாட்டுத் தேவைக்காக இந்த கோவிலை அரசு அனுமதியுடன் 1935ஆம் ஆண்டு விரிவாக்கினர். இங்கே ஒரு குளமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நாட்களில் தட்டா இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் இங்கே இருந்ததாகவும் பின்னர் அதிக பல்வேறு இந்தியர்கள் இங்கே குடிபெயர்ந்ததாகவும் கராணி குறிப்பிட்டார்.

NAT-210801-KRISHNA-TEMPLE-ARAMZAN-14
Image Credit: Gulf News

அமீரகத்தில் வாழ்வதற்கு தாங்கள் பெருமைப்படுவதாகவும் தங்களுடைய மத நம்பிக்கை மற்றும் சடங்குகளுக்கு அரசு உரிய கவனம் கொடுப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கராணி குறிப்பிட்டார் புர் துபாயின் அல் ஃபஹிதி தெருவில் (Al Fahidi Street) அமைந்துள்ள இந்த ஸ்ரீ கிருஷ்ணா கோவிலுக்கு வாய்ப்புள்ளோர் சென்று வாருங்கள்.

KRISHNA-TEMPLE-ARAMZAN-
9 Shares
Share via
Copy link
Powered by Social Snap