UAE Tamil Web

தவறான ஓவர்டேக் ; தூக்கி எறியப்பட்ட கார் – அபுதாபி காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை..!

acciddent

மக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள அபுதாபி காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இருப்பினும் விதிமுறைகளை கார் டயரின் கீழே எலுமிச்சம்பழம் போல நசுக்கிவிட்டு வாகனத்தை தங்களது இஷ்டத்திற்கு ஓட்டி, அவதிப்படும் நபர்கள் அமீரகத்திலும் அதிகமாகத்தான் இருக்கிறார்கள்.

அபுதாபி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை இன்று வில்லங்க டிரைவர் ஒருவர் காரோட்டும் வித்தையை வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதில், சாலையின் இடதுபுறத்தில் சென்றுகொண்டிருந்த கார், திடீரென வலதுபுறத்தில் வாம்மா.. மின்னல் என்பது போலப் பாய்ந்து சென்று, சிவனே என்று நின்றிருந்த காரின் மீது மோதுகிறது.

கார்களை பத்திரமாக நிறுத்தி வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்றுகொண்டிருந்த காரை, தாறுமாறு டிரைவர் மின்னல் வேகத்தில் தாக்கி உருட்டியிருக்கிறார்.

அமீரக போக்குவரத்து விதி 42ன் படி தவறான திசையில் ஓவர்டேக் செய்தல் குற்றமாகும். இதற்கு 1000 திர்ஹம்ஸ் அபராதமும் 6 கரும்புள்ளிகளும் வழங்கப்படும் என அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.

acciddent
30 Shares
Share via
Copy link