UAE Tamil Web

அமீரகத்தில் பிச்சை எடுப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றித் தெரியுமா?

Beggers

அமீரகத்தில் பிச்சை எடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆரோக்கியமான நபர் இக்காரியத்தில் ஈடுபட்டால் தண்டனைகள் இன்னும் கடுமையாக இருக்கும். இதேபோல் பிச்சை எடுப்பவர்களுள் பலருக்கு அவர்கள் செய்யும் தவறைப் பொறுத்து தண்டனையானது வழங்கப்படுகிறது.

பொதுவாக அமீரகத்தில் பிச்சை எடுப்பவர்களுக்கு 5000 திர்ஹம்ஸ் அபராதமும் 3 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். பணமாகவோ, பொருளாகவோ யாசகம் வாங்கினாலும் மேற்கண்ட தண்டனை உண்டு. வருமானம் பெறுபவராக இருந்து, ஆரோக்கியமாகவும் இருப்பவர் பிச்சை எடுத்தால் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும்.

போலவே, உடல்நிலை பாதிக்கப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்டவர் போல நடித்தாலும் தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்கொடை வசூலிப்பதாகக்கூறி மோசடியில் ஈடுபடுவோரும் இத்தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

கூட்டாக சேர்ந்து பிச்சையெடுத்தால் 1 லட்சம் திர்ஹம்ஸ் வரையில் அபராதம் விதிக்கப்படுவதோடு, 6 மாத சிறைத்தண்டனையும் அனுபவிக்கவேண்டிவரும். அதேபோல ஒருவரை பிச்சை எடுக்க வைக்கும் நோக்கத்தோடு அமீரகத்திற்குள் அழைத்துவந்தால் அவருக்கும் மேற்கண்ட தண்டனை பொருந்தும்.

அதேபோல கூட்டாக சேர்ந்து பிச்சையெடுத்து சிக்கிக்கொண்டவர்களுக்கு தலா 5000 திர்ஹம்ஸ் அபராதம் அல்லது 3 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

அமீரக சட்டதிட்டங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அமீரக பொது வழக்குத்துறை தனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது.