UAE Tamil Web

துபாய் பட்டத்து இளவரசர் வளர்த்த பறவை இன்று அவரைவிட்டு பறந்து சென்றது – இளவரசர் வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ..!

dubai,-sheikh-hamdan,-doves,-viral,-uae

ஆகஸ்டு மாத துவக்கத்தில், துபாயின் பட்டத்து இளவரசரும், நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) அவர்களுடைய மெர்சீடிஸ் எஸ்யூவி (Mercedes SUV) காரின் விண்ட்ஷீல்ட்-ற்கு கீழே பறவை ஒன்று கூடுகட்டியிருந்தது.

முட்டைகளுடன் தனது கூட்டில் அமர்ந்திருக்கும் பறவையைப் பாதுகாக்க சில காலத்திற்கு காரை எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டிருந்தார் துபாய் இளவரசர். யாரும் அந்தப் பறவைக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதற்காக அதனைச்சுற்றி சிவப்பு டேப் ஒன்றும் சுற்றப்பட்டிருந்தது.

வேகமாக வளர்ந்துவந்த அந்தப் பறவை இன்று, தனது குடும்பத்துடன் அந்த இடத்தை விட்டு பறந்து சென்றிருக்கிறது. அதனை துபாயின் பட்டத்து இளவரசர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருக்கிறார்.

சுமார் ஒருமாத காலம் பறவைக் குஞ்சுகளுக்கு தாய்ப் பறவை உணவூட்டியது, அவற்றின் செயல்கள், நுண்ணிய வளர்ச்சி இறுதியாக அவை தங்களது வாழ்வின் முதல் பயணத்தைத் துவங்கியது வரையில் வீடியோவாக வெளிவந்திருக்கிறது. நெகிழ்ச்சியான இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.