UAE Tamil Web

ஆப்பரேஷன் “லொக்கேஷன்” – துபாய் காவல்துறைக்குக் கிடைத்த ரகசிய மெசேஜ் – வெளிவந்த திடுக்கிடும் வீடியோ..!

சமூக வலைத்தளங்கள் மூலமாக அமீரகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த பெரிய நெட்வொர்க்கை துபாய் காவல்துறை கையும் களவுமாக கைது செய்திருக்கிறது. ஆப்பரேஷன் “லொக்கேஷன்” என்னும் பெயரில் துபாய் காவல்துறை நடத்திய அதிரடி ரெய்டில் அமீரகத்தின் பல்வேறு பகுதியில் பூமிக்கடியில் பதுக்கி வைக்கப்பட்ட 1,342 கிலோ போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலமாக பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருளின் கோஆர்டிநேட்ஸ் எனப்படும் புவியியல் அமைவிட குறியீடுகளை அனுப்பி போதைப்பொருட்களை விற்பனை செய்துவந்த 91 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு 176 மில்லியன் திர்ஹம்ஸ் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி,” சமூக வலைத்தளங்கள் மூலமாக தீய செயல்களில் ஈடுபடுவோரை துபாய் காவல்துறை மிக உன்னிப்பாக கவனித்துவருகிறது என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களை கையாழும்போது பொதுமக்கள் மிக கவனமாக இருத்தல் வேண்டும்”

“சந்தேகம் ஏற்படும் வகையில் ஏதேனும் பதிவுகள் அல்லது போதை விற்பனை குழுக்கள் பற்றித் தெரியவந்தால் உடனடியாக www.ecrime.ae எனும் முகவரியில் பொதுமக்கள் புகாரளிக்கலாம்” என்றார்.

3 Shares
Share via
Copy link