பிராந்தியத்தின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலை முறியடித்திருக்கிறது துபாய் போலீஸ். மத்திய கிழக்கு நாடு ஒன்றைச் சேர்ந்த குற்றவாளி அமீரகத்தில் தங்கியிருப்பது குறித்தும் விரைவில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலை அவர் மேற்கொள்ள இருப்பதாகவும் துபாய் காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இதனால் சுதாரித்துக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் ஆப்பரேஷன் ஸ்கார்பியன் என்னும் திட்டத்தைத் துவங்கியுள்ளனர். சந்தேகிக்கும் நபரை 24 மணிநேரமும் காவல்துறை ரகசியக் கண்காணித்து வந்தது. அப்படியொரு நாளில் கடத்தல் ஆசாமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவே, இதுதான் சமயம் என விழித்துக்கொண்டது காவல்துறை.
நினைத்தபடியே சுமார் 500 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அமீரகத்திற்குள் எடுத்துவந்திருக்கிறார் அவர். வேறு எமிரேட்டில் கிடங்கு ஒன்றினை வாடகைக்கு எடுத்து போதைப்பொருளை பதுக்க பிளான் செய்திருக்கிறார் அவர்.
இருப்பினும் காவல்துறை குற்றவாளியை கையும் களவுமாகப் பிடித்திருக்கிறது. கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட SUV வாகனம் ஒன்றினையும் துபாய் காவல்துறை கைப்பற்றியிருக்கிறது.
காவல்துறை கைப்பற்றிய போதைப் பொருளின் மதிப்பு 500 மில்லியன் திர்ஹம்ஸ் ஆகும். சர்வதேச நாடுகள் பலவும் இக்குற்றவாளியை தேடிவந்த நிலையில் துபாய் காவல்துறை ஸ்கெட்ச் போட்டு இவரைத் தூக்கியிருக்கிறது. குற்றவாளியின் தாய்நாட்டிலும் அவர்மீது வழக்கு இருப்பதாக காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#DubaiPolice foils Drug Smuggling Attempt of 500 Kilograms of Cocaine. pic.twitter.com/bdv4wFaUsJ
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) October 10, 2021
