34.8 C
Dubai
July 11, 2020
UAE Tamil Web

துபாயில் ஆதாரமில்லாமல் அரங்கேறிய திருட்டு.! 48 மணி நேரத்தில் சிக்கிய கும்பல்.!

thieves get caught in 48 hours

ஒரு SOS அவசர அழைப்பு பெற்ற 48 மணி நேரத்திற்குள், துபாய் காவல்துறை எமிரேட்ஸ் ஹில்ஸில் (Emirates Hills) உள்ள ஒரு ஐரோப்பிய முதலீட்டாளரின் வில்லாவிலிருந்து திருடப்பட்ட 20 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள நகைகளை மீட்டெடுத்துள்ளனர். அந்த கொள்ளையர்களின் கும்பலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவியல் புலனாய்வு விவகாரங்களுக்கான உதவித் தளபதி மஜ்-ஜெனரல் நிபுணர் கலீல் இப்ராஹிம் அல் மன்சூரி, துபாய் காவல்துறையின் பொது குற்றவியல் புலனாய்வுத் துறை அதிகாரிகளை, குற்றம் நடந்த இடத்தில் ஆதாரங்கள் இல்லாத போதிலும் சந்தேக நபர்களை அடையாளம் கொண்டுள்ளதை பெருமைப்படுத்தி பாராட்டினார்.

“அவசர அழைப்பு வந்த 48 மணி நேரத்திற்குப் பிறகு, திருடிய கும்பல் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டன. இது எங்கள் அதிகாரிகளின் பெரும் முயற்சி” என்று மேஜர் ஜெனரல் அல் மன்சூரி கூறினார். இதுகுறித்து பொருட்களை இழந்த ஐரோப்பிய முதலீட்டாளர் “எனது மனைவி தூங்கி விழித்து பார்க்கும்போது எங்களின் லாக்கரிலிருந்து வைரங்கள், தங்கம் மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்கள் அனைத்தையும் முழுவதுமாக காலி செய்திருப்பதை உணர்ந்துள்ளார்” என்று காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

கர்னல் அடெல் அல் ஜோக்கர் “சம்பவத்தின் அடிப்பகுதிக்குச் செல்ல அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்கள் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், தொழில்முறை கொள்ளையர்களால் குற்றம் செய்யப்பட்டதால் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.” என்று கூறுகிறார்.

விசாரணை மற்றும் கைது

இந்த சம்பவம் குறித்து ஒரு முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அடிக்கடி திருட்டு சம்பவம் நடத்திய கொள்ளைக் குற்றவாளியான சந்தேக நபர்களில் ஒருவரை அடையாளம் கண்டு அவர் கண்காணிக்கப்பட்டார். மேலும் அவரது நெருங்கிய கூட்டாளியும் போலீசாரால் நோட்டம் விடப்பட்டார் என்று கோல் அல் ஜோக்கர் கூறினார்.

“திருட்டு பொருட்களை வாங்கும் சட்ட விரோத விற்பனையாளர்களிடம் அந்த இருவரும் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. அந்த சந்தேக நபர்களில் ஒரு பெண் கூட்டாளியும் இருந்தார். அவர் நாட்டிற்கு வெளியே திருடப்பட்ட பொருட்களை கடத்தல் செய்வதற்கு பொறுப்பானவர்” என்று மேலும் அவர் கூறினார்.

“துபாய் போலீஸ் அதிகாரிகள் அந்த திருடர்களின் மறைவிடங்களை சோதனை செய்து நாட்டை விட்டு வெளியேற ஏற்பாடு செய்த அவர்களின் திட்டங்களை வெற்றிகரமாக தோற்கடித்தனர். மேலும் ஐந்து நபர்களை கொண்ட அந்த திருட்டு கும்பல் (நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண்) ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள். விசிட் விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்துள்ளார்கள்.” என்று பிரிகேடியர் அல் ஜல்லாஃப் தெரிவித்தார்.

அலட்சியம்:

துபாய் காவல்துறையின் பொது குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குனர் பிரிகேடியர் ஜமால் சேலம் அல் ஜல்லாஃப் கூறுகையில், கவனக்குறைவுதான் குற்றத்தின் பின்னணியில் முக்கிய காரணம் என்கிறார். அதாவது இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் திருட்டுக்கு எதிராக தனது குடியிருப்பைப் பாதுகாக்கத் தவறியதாகத் தெரிகிறது என்கிறார்.

அத்துடன் அனைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்களும் இருந்தபோதிலும், சிலர் எச்சரிக்கைகளை புறக்கணிக்க விரும்புகிறார்கள் என்று பிரிக் அல் ஜல்லாஃப் சுட்டிக்காட்டினார்.

மேலும் மதிப்புமிக்க பொருட்களை வீட்டில் வைத்திருக்கும்போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க.!