பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கானின் 55 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையடுத்து துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடம், ஷாருக்கானிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மின் விளக்குகளால் ஒளிர்ந்தது.
#BurjKhalifa adds sparkle to the birthday celebration of the Baadshah of Bollywood! Happy birthday @iamsrk! #ShahRukhKhan
احتفالاتنا بعيد ميلاد نجم بوليوود وملكها، شاروخان، لا يمكن أن تمر دون أن نضيء #برج_خليفة لنهنئه على طريقتنا! كل عام وأنت بخير! pic.twitter.com/xFMycVD90V— Burj Khalifa (@BurjKhalifa) November 2, 2020
புர்ஜ் கலீஃபா பின்புலத்தில் தெரியுமாறு புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஷாருக்கான்,” உலகின் மிகப்பெரிய திரையில் என்னை நானே பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய அடுத்த படத்திற்கு முன்னரே நான் திரையில் தோன்றியிருக்கிறேன். இதற்குக் காரணமாக இருந்த எனது நண்பர் முகமது அலாபர், புர்ஜ் கலீஃபா, எமார் துபாய் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது குழந்தைகள் இதனால் மிகவும் ஈர்க்கப்பட்டனர். நான் அதனை நேசிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, புர்ஜ் கலீஃபா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” பாலிவுட் பாட்ஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு புர்ஜ் கலீஃபா ஒளிர்கிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷாருக்கான்” எனக் குறிப்பிட்டுள்ளது.