UAE Tamil Web

வீடியோ: கால்பந்து ஜாம்பவான் மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்திய புர்ஜ் கலீஃபா..!

DiegoMaradon

அர்ஜெண்டினாவின் கால்பந்து ஜாம்பவானான டீகோ மரடோனா கடந்த புதன் கிழமையன்று தனது 60 வது வயதில் மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

- Advertisment -

இதன் ஒருபகுதியாக நேற்று இரவு உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் வண்ண விளக்குகள் மூலம் மரடோனாவின் புகைப்படம் ஒளிர்ந்தது. கால்பந்து உலகை கட்டி ஆண்ட மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இது அமைந்தது.

“புகழ்பெற்ற டீகோ மரடோனாவிற்கு புர்ஜ் கலீஃபா அஞ்சலி செலுத்துகிறது. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்” என புர்ஜ் கலீஃபாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவிற்கு 1986 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை பெற்றுத் தந்த மரடோனா அமீரகத்தின் அல் வாஸில் மற்றும் புஜைரா கால்பந்து கிளப்களுக்கு பயிற்சியாளராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் துபாய் விளையாட்டுத்துறையின் கவுரவ தூதராகவும் மரடோனா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.