அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், ‘இன்ஃபினிட்டி’ மேம்பாலத்தினை சமீபத்தில் திறந்து வைத்தார். இந்நிலையில், இன்று இந்த மேம்பாலம் முதல்முறையாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இன்று அதிகாலையில் மேம்பாலத்தினைப் பார்வையிட்டனர்.
இந்த பாலம் குறித்த அறிவிப்பு முதன் முதலில் 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இணையதளத்தின்படி, பாலம் சிற்றோடையின் குறுக்கே செல்கிறது. இது 300 மீட்டர் நீளமும் 22 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் இரு திசைகளிலும் 24,000 வாகனங்கள் செல்ல முடியும்.
HE Mattar Mohammed Al Tayer, Director General, Chairman of the Board of Directors of the Roads and Transport Authority, and HE Lieutenant-General Abdullah Khalifa Al Marri, Commander-in-Chief of Dubai Police, affirming this morning the readiness of Infinity Bridge, pic.twitter.com/U4Fvit65aU
— RTA (@rta_dubai) January 15, 2022
RTA வின் இயக்குனரும் நிர்வாக இயக்குனர் குழுவின் தலைவருமான மட்டார்முகமது அல் தயேர், துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதியுமான லெப்டினென்ட் ஜெனரல் முகமது கலிஃபா அல் மர்ரி ஆகியோர் மேம்பாலத்தினைப் பார்வையிட்டனர்.