UAE Tamil Web

ஈத் அல் அத்ஹாவின்போது திறக்கப்பட இருக்கும் அழகிய மலை வாசஸ்தலம்..!

sharjah

சுற்றுலாத்துறையில் மிகுந்த கவனம் செலுத்திவரும் ஷார்ஜா அரசு தற்போது அதில் புதிய மைல்கல் ஒன்றினைப் பதிக்கக் காத்திருக்கிறது. கோர் ஃபக்கான் பகுதியில் மலையின் மீது கட்டப்பட்டுவரும் இந்த அல் சுஹுப் ஓய்வு விடுதி (Al Suhub Rest House) ஈத் அல் அத்ஹா பண்டிகையின்போது பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட இருக்கிறது.

கடல்மட்டத்தில் இருந்து 580 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய இடத்திலிருந்து பார்த்தால் முழு கோர் ஃபக்கானையும் உங்களால் கண்டு ரசிக்க முடியும்.

30 மீட்டர் விட்டமுள்ள வட்ட வடிவமாக கட்டப்பட்டுள்ள இந்த விடுதியில் உணவகங்கள், நீர் ஊற்றுக்கள், கடற்கரைகள் மற்றும் பார்க்கிங் வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஓய்வு இடத்திற்குச் செல்வதற்காக 5.63 கிலோமீட்டர் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்தவருட டிசம்பரில் கோர் ஃபக்கானில் நீர்வீழ்ச்சி ஒன்று அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 45 மீட்டர் உயரத்திலும் 11 மீட்டர் அகலத்திலும் இயற்கையாக அமைந்த குன்றினுள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த நீர்வீழ்ச்சியானது அமைக்கப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 43 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

மற்றொரு முக்கிய சுற்றுலாத் தலமான ஷீஸ் பூங்காவும் கடந்தாண்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. 11,362 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இந்த பூங்காவில் 25 மீட்டர் உயரமுள்ள செயற்கை நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

sharjah
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap