துபாயில் உள்ள உலக வர்த்தக கட்டிடத்தில் 72 வது உலக விண்வெளி ஆராய்ச்சி கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொண்ட அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அமீரகத்தின் பிராம்மாண்ட செயற்கைக்கோள் திட்டத்தை அறிவித்தார்.
முழுவதும் அமீரகத்திலேயே தயாரிக்கப்படும் MBZ-SAT செயற்கைக்கோள் 700 கிலோ எடை கொண்டதாகவும் பிராந்தியத்திலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கியையும் கொண்டிருக்கும் என இளவரசர் தெரிவித்தார்.
தகவல் தொடர்பு மற்றும் உயர் தெளிவுத் திறன் கொண்ட படங்களைப் பெறுதலுக்கு இந்த செயற்கைக்கோள் உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
700 கிலோ எடையும் 3m X 5m ஆரமும் கொண்ட இச்செயற்கைக்கோள் வரும் 2023 ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக விண்வெளிக்கு ஏவப்பட இருக்கிறது.
இந்த செயற்கைக்கோள் வடிவமைப்பில் ஆற்றல் வாய்ந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ள ஆராய்ச்சியாளர் குழு இதுபற்றிப் பேசுகையில், 500 கிலோமீட்டர் உயரத்திலிருந்தும் இந்த செயற்கைக்கோள் மூலமாக பூமியின் தரைப்பரப்பை தெளிவாக புகைப்படமெடுக்கலாம் என்றனர்.
In collaboration with UAE based manufacturers, MBRSC continues to develop the MBZ-SAT, which will be the region’s most advanced high accuracy, high resolution imaging satellite.#MBZSAT pic.twitter.com/7ggyl22Ppd
— MBR Space Centre (@MBRSpaceCentre) October 27, 2021
