அபுதாபியின் கலீதியா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரியவும் அருகிலிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக சிவில் பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக விரைந்துவந்த தீயணைப்புப் படை வீரர்கள், காரில் ஏற்பட்ட தீயினை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என சிவில் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
வாகனங்களை சீரான இடைவெளியில் பராமரிப்பு செய்ய வேண்டும் எனவும் அதன்மூலம் இப்படியான விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என சிவில் பாதுகாப்புப்படை அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.