UAE Tamil Web

அதிர்ந்தது துபாய்: பலத்த சப்தத்துடன் வெடித்த கப்பல் கொள்கலன் – தீயால் சூழ்ந்த ஜெபல் அலி துறைமுகம்..!

jebal port

நேற்று இரவு துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் பிரதான கப்பல் பாதையில் இருந்து கிளம்பத் தயாரான சரக்குக் கப்பலில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்கிறது. இதனால் பயங்கர தீவிபத்தும் ஏற்பட்டது.

சரக்குக் கப்பலில் இருந்த 14 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரியக்கூடிய பொருளைக் கொண்டிருந்த அந்த கொள்கலன் வெடித்ததே இந்த தீவிபத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி உடனடியாக சம்பவ இடத்திற்கு என்று தீயணைப்புப் பணிகளை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர்,” சிறிய ரக சரக்குக்கப்பலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அக்கப்பலில் மொத்தம் 130 கொள்கலன்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் 3 கொள்கலன்களில் எரியும் தன்மையுள்ள பொருட்கள் இருந்திருக்கின்றன. மற்றபடி அவற்றுள் வெடிபொருளோ கதிரியக்கத் தன்மைகொண்ட பொருட்களோ இல்லை” என்றார்.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாக சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்றுவருவதாக துபாய் ஊடக அலுவலகத்தின் இயக்குனர் மோனோ அல் மர்ரி தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு நிகழ்ந்த இந்த பயங்கர விபத்தின் அதிர்ச்சியை அருகில் உள்ள கட்டிட வாசிகள் உணர்ந்துள்ளனர். தங்களது அனுபவத்தை அவர்கள் சமூக வலைத்தங்களில் பகிரந்துள்ளனர்.

இருப்பினும் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதாகவும் மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை எனவும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

jebal port
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap