UAE Tamil Web

வீடியோ : இது அதிசயம் தான்… ஷார்ஜாவில் அரியவகை வெள்ளை காண்டாமிருகம் முதல் குட்டியை ஈன்றுள்ளது..!

rhino-

ஷார்ஜா சஃபாரி பார்க்கில் அழிந்துவரும் உயிரினமான வெள்ளை காண்டாமிருகம் தனது முதல் குட்டியை ஈன்றுள்ளது விலங்குகள் ஆர்வலர்களிடையே ஆனந்ததை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் குறைவான எண்ணிக்கையில் காணப்படும் இந்த ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வெள்ளைக் காண்டாமிருகத்தினை காப்பாற்ற ஷார்ஜா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

புதிதாக பிறந்துள்ள காண்டாமிருகக்குட்டி 60 – 65 கிலோ இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச சபையின் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் டாக்டர். சுல்தான் பின் முகமது அல் காசிமி, சமீபத்தில் இந்த பார்க்கை பார்வையிட்டார். அப்போது ஆப்பிரிக்காவில் உள்ளதைப்போன்று சுற்றுச்சூழலை இந்த விலங்குகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி பல்வேறு திட்டங்களை இந்த பார்க் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இங்கே உள்ள சிங்கத்திற்கு கூண்டுகள் ஏதும் கிடையாது. ஆம். பார்வையாளர்களுக்கும் சிங்கத்திற்கும் கண்ணுக்குத் தெரியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொட்டால் மட்டுமே அப்படி ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியவரும்.

விலங்குகளுக்கு தனித்துவிடப்பட்ட உணர்வு வராமல் இருக்க, ஆப்பிரிக்காவில் இருக்கும் மரங்கள் இங்கே நடப்பட்டு, வளர்க்கப்படுகின்றன.

இப்படி பல முன்னெடுப்புகளை எடுத்துவரும் சஃபாரி பார்க் மீண்டும் மக்கள் பார்வைக்கு விரைவில் திறக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rhino-
0 Shares
Share via
Copy link