UAE Tamil Web

எதிர்காலத்தில் அமீரகத்தின் நிலை எப்படியிருக்கும்..? என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் – துபாய் ஆட்சியாளரின் மாஸ் வீடியோ..!

SHEIKH MOHAMMED

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தலைமைப்பண்புகள் குறித்த செய்திகளை Flashes of Leadership என்னும் பெயரில் வெளியிடுவது வழக்கம்.

அதன்படி இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,” பண்டைய எகிப்தியர்கள் பிரம்மிடை கட்டும்போது, அந்தப் படைப்பு 5000 வருடம் கழித்தும் பேசப்படும் என நினைத்திருக்க மாட்டார்கள். இன்று உலகின் சிறந்த ஓவியமான மோனாலிசாவை வரையும்போது லியானார்டோ டாவின்சி அதன் வெற்றி குறித்து நினைத்திருக்கமாட்டார்; அதேபோல, நம்முடைய பழைய சாதனைகளில் கவனத்தை ஏற்படுத்தவேண்டாம். எதிர்காலத்தில் நம்மால் எத்தனை பெரிய உயரத்தை அடையமுடியும் என்பதை நினைத்துப் பாருங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் துபாய் இளவரசர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap