UAE Tamil Web

“சைக்கிள் ஓட்டலாம் வாங்க பாஸ்” – துபாய் இளவரசரின் அன்பான வேண்டுகோள்..!

hamdan

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஒரு சாகசப் பிரியர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு அனைவரையும் சைக்கிளில் பயணம் செய்து உடல் நலத்தை பேணிப் பாதுகாக்க வலியுறுத்தும் விதமாக அவரே சைக்கிள் ஓட்டி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

40 டிகிரி வெயிலில் சைக்கிள் பயணத்தை மேற்கொண்ட இளவரசர் இந்தப் பயணத்தின் மூலம் 1,685 கலோரிகளை குறைக்க முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ வைரலாகிவிட்டது.

இயற்கை மற்றும் விலங்குகளின் மீது தீராக்காதல் கொண்ட துபாய் இளவரசர் இப்படி சாகச நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.  இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12.1 மில்லியன் மக்கள் இவரை பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

hamdan
1 Share
Share via
Copy link