UAE Tamil Web

“முதலில் உங்களை நம்புங்கள்; உங்களால் முடியாதது ஏதுமில்லை” – தன்னம்பிக்கை அளிக்கும் துபாய் ஆட்சியாளரின் வீடியோ..!

Sheikh-Mohammed-bin-Rashid-Al-Maktoum_16d63e3b705_large

தலைமைப் பண்பு மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலான வீடியோக்களை துபாய் ஆட்சியாளர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிடுவது வழக்கமானவை தான்.

அதன் தொடர்ச்சியாக அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில்,” காலையில் எழுந்தவுடன் குறிப்பிட்ட ஒரு வேலையை உங்களால் செய்ய முடியாது எனச் சொல்கிறீர்கள். பின்னர் உங்களால் அதே வேலையை முடிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. உங்களுடைய எண்ணங்களும் மனமும் உங்களுடைய காதுகளில் உங்களால் முடியாது எனச் சொல்லிக்கொண்டே இருக்கும்.

“அதற்குப் பதிலாக, என்னுடைய இலக்கை அடைவதற்கான ஆற்றல் என்னிடம் இருக்கிறது என நினையுங்கள். உங்களுடைய நேர்மறை எண்ணங்களை நம்புங்கள். இல்லையேல் உங்களுடைய கனவுகளை உங்களால் அடைய இயலாது”

“ஒருவர் தன்னால் ஒன்றைச் செய்ய முடியும் என தீர்க்கமாக நம்பினால் அவரால் அதை நிச்சயம் செய்ய முடியும். முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

துபாய் ஆட்சியாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைமைப் பண்பு குறித்த தனது கருத்துக்களை Flashes of Leadership என்ற தலைப்பில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Sheikh-Mohammed-bin-Rashid-Al-Maktoum_16d63e3b705_large
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap