22.7 C
Dubai
October 23, 2020
UAE Tamil Web

உம் அல் குவைனில் வைரலான வீடியோ.! வாகன ஓட்டுநர் கைது.!

wrong-way_17044169c17_large

உம் அல் குவைன் நெடுஞ்சாலையில் பொறுப்பற்ற முறையில் மற்றும் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஒட்டியதற்காக, ஒரு வாகன ஓட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் சாலையில் தவறான பக்கத்தில் வாகனத்தை ஓட்டி பிற வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியது, மற்றொரு வாகன ஓட்டியால் வீடியோ எடுக்கப்பட்டது.  அந்த வீடியோ கடந்த வியாழன் கிழமை (February 13 2020) சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு, அந்த பகுதி முழுவதும் வைரலாக பரவியது.

வீடியோ கிளிப்பில், அந்த வாகனம், உம் அல் குவைனின் அல் இத்திஹாத் சாலையிலிருந்து ஷார்ஜாவின் அல் ஹிம்ரியா பகுதியை நோக்கி செல்வதாக காட்டியது. அதுமட்டுமின்றி அந்த வீடியோவில் தவறான பாதையில் சென்ற காரின் நம்பர் பிளேட் மற்றும் டிரைவரின் முகம் தெளிவாக தெரிந்ததால், வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக உம் அல் குவைன் போலீசார் தெரிவித்தனர்.

இதன் விளைவாக அந்த காரிலிருந்து 50 வயதுடைய டிரைவர் கைது செய்யப்பட்டு அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



error: Alert: Content is protected !!