UAE Tamil Web

துபாய்: ரசாயனக் கிடங்கில் பயங்கர தீ விபத்து – வைரலாகும் வீடியோ..!

fire accident

துபாயின் அல் கூஸ் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக துபாய் சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. எளிதில் தீப்பிடிக்கும் தன்மையுள்ள ரசாயனங்களை சேமித்து வைத்திருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

அல் கூஸ் பகுதியில் நேர்ந்த தீ விபத்து குறித்த புகைப்படங்களை கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இன்று காலை 11.09 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

3 தீயணைப்பு இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றிருப்பதாகவும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fire accident
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap