UAE Tamil Web

அமீரகத்தில் பயங்கர தீவிபத்து – குடியிருப்பாளர்கள் வெளியேற உத்தரவு – வைரலாகும் வீடியோ..!

FIRE ACIDENT

ஷார்ஜா சிட்டி செண்டர்-க்கு எதிரே அல் வஹ்தா சாலையில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கட்டிடம் ஒன்றில் இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இப்பயங்கர விபத்தில் உயிரிழப்புகள் ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தினால் கட்டிடத்தை அடுத்துள்ள பரபரப்பான சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது எனவும் இந்த கட்டிடம் இடிக்கப்பட இருப்பதாகவும் ஷார்ஜா சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய ஷார்ஜா சிவில் பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர்,” எங்களுக்கு இந்த விபத்துக் குறித்து மதியம் 12:45 மணிக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்னம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றனர். கட்டிடத்தின் இடைப்பட்ட தளங்களில் இருந்து பற்றிய தீ, காற்றின் வேகம் காரணமாக மேலே பரவியிருக்கிறது” என்றார்.

இந்தக் கட்டிடத்தில் முன்பு வாழ்ந்தவர்கள் விட்டுச்சென்ற மரப் பொருட்கள் அனைத்தும் தீயினால் சாம்பலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்திற்கு செல்லும் வழியை காவல்துறையினர் அடைத்திருக்கின்றனர். மேலும், அருகில் வசித்துவரும் மக்களை பத்திரமான இடத்திற்குச் செல்லுமாறு காவல்துறை எச்சரித்துள்ளது.

குளிர்விக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் தடயவியல் மற்றும் தீவிபத்து நிபுணர்களிடம் கட்டிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.