UAE Tamil Web

துபாய் எக்ஸ்போ 2020 க்கு இன்னும் 100 நாட்களே உள்ளன – கவுண்டவுனைத் துவக்கிவைத்த துபாய் ஆட்சியாளர்..!

Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum

ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இப்போது துபாயின் பக்கம் திரும்பியுள்ளது. கொரோனாவின் முதல், இரண்டு என அலைகள் ஓயாமல் வீசிக்கொண்டிருக்கும் வேளையில் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், பிரம்மாண்ட இலவச தடுப்பூசித் திட்டம், கடுமையான கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் துணையோடு துபாய் எக்ஸ்போ 2020 ஐ நடத்திக்காட்ட தயாராய் இருக்கிறது துபாய் அரசு.

சென்ற வருடம் நடந்திருக்க வேண்டிய இந்த பிரம்மாண்ட கண்காட்சி கொரோனா காரணமாக இந்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் 100 நாட்களில் இந்தக் கண்காட்சி துவங்க இருப்பதாக அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர்,” உலகின் மிகப்பெரிய கலாச்சார நிகழ்ச்சியான துபாய் எக்ஸ்போ 2020 இன்னும் 100 நாட்களில் துவங்கவுள்ளது. பெருநோய்க்குப் பிறகு 192 நாடுகளும் சங்கமிக்கும் வரலாற்று நிகழ்வு துபாயில் நடைபெற இன்னும் 100 நாட்களே உள்ளன. 192 பெவிலியன்கள், 50,000 பணியாளர்கள், 30,000 தன்னார்வலார்கள் இந்த பிரம்மாண்ட கண்காட்சிக்கு தயாராக இருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவிற்குப் பிறகு நடைபெறும் முதலாவது உலகளாவிய பிரம்மாண்ட கண்காட்சி இதுதான் என்பதால் உலகின் பல தரப்பில் இருந்தும் மக்கள் துபாய்க்கு வர ஆர்வமுடன் உள்ளனர்.

துபாய் எக்ஸ்போ 2020 பற்றிய முழுமையான ஆச்சர்யமூட்டும் தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap