UAE Tamil Web

அமீரகத்தில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் : இறுதிச் சடங்குகளைச் செய்த முஸ்லீம் இளைஞர்கள்..!

Markaz-ICF-Welfare-Team-volunteers-help-perform-burial-of-Maria-at-Jebel-Ali-cemetery

தமிழகத்தைச் சேர்ந்த மரியா ஜார்ஜ் (62) துபாயில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு விசிட்டிங் விசாவில் வந்திருந்தார். துரதிருஷ்டவசமாக துபாயில் அவர் உயிரிழக்க இறுதிச் சடங்குகளை செய்ய முடியாமல் அவரது மகள் தவித்திருக்கிறார். வழக்கமாக விசிட்டிங் விசாவில் அமீரகம் வருவோர் இங்கே உயிரிழந்தால் அவரது உடல் அவரது தாய்நாட்டிற்கு எடுத்துச்செல்லப்படும்.

இரு நாடுகளுக்கிடையே விமானங்கள் இயக்கத் தடை அமலில் இருப்பதால் அதற்கும் வழியில்லாமல் போகவே, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருக்கிறார் மரியாவின் மகள். அப்போது துபாயில் இயங்கிவரும் மார்கஸ் பொது நல அமைப்பிடம் தனது நிலைமையை எடுத்துரைக்க அதிகாரிகளும் நிச்சயம் உதவுவதாக ஒப்புக்கொண்டனர்.

இந்திய கலாச்சார மையத்திடம் பேசிய மார்கஸ் அமைப்பு, மரியாவின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்தது. ஜெபல் அலி கல்லறையில் மரியாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. மார்கஸ் அமைப்பின் தன்னார்வலர்கள் சஜித் அஸ்லாமி, நசிர் சொக்லி, சனீர் வர்கலா மற்றும் ஷம்ஷிர் சொக்லி ஆகியோர் இறுதிச்சடங்கை மேற்கொண்டனர்.

இந்திய கலாச்சார மையத்தின் தன்னார்வலர்கள் மற்றும் ஜெபல் அலி தேவாலயத்தின் பாதிரியார் மைக்கில் கார்டோஸ் ஆகியோருக்கு மரியாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். இதுகுறித்துப் பேசிய அருட்தந்தை கார்டோஸ்,” என்னுடைய 30 ஆண்டுகால இந்த சேவையில் இப்படி ஒரு நிகழ்வை நான் பார்த்ததில்லை” என்றார்.

மார்கஸ் உலகளாவிய ஊடக ஒருங்கிணைப்பாளர் முனீர் மொஹியாதின் இதுபற்றிப் பேசுகையில்,” சகிப்புத்தன்மைக்கு என தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய முதல் நாடு அமீரகம் தான். நாட்டின் தந்தை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களுடைய கொள்கையை இந்த தேசம் பின்பற்றுகிறது. அதனாலேயே இந்த செய்தியை நாங்கள் பரப்ப இருக்கிறோம். இந்தத் தொற்று காலத்தில் மார்கஸ் உடன் அமீரக அதிகாரிகள் கைகோர்க்கவேண்டும் என விரும்புகிறோம். நல அமைப்புகள் மற்றும் மக்களிடயே இணைப்பை உருவாக்குவதே அமீரக தலைவர்களின் நோக்கமுமாகும்” என்றார்.

Markaz-ICF-Welfare-Team-volunteers-help-perform-burial-of-Maria-at-Jebel-Ali-cemetery
0 Shares
Share via
Copy link