UAE Tamil Web

“அமீரகத்தில் அனாதைகள் என்று யாருமில்லை” – ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு புத்தாடைகளை வாங்கிக்கொடுத்த துபாய் அரசு..!

RTA-officials-gift-clothes-to-orphans-for-Eid-Al-Adha-2021-

வரவிருக்கும் ஈத் அல் அத்ஹா பண்டிகையை முன்னிட்டு அமீரகமே திருவிழாக்கோலம் பூண்டுவருகிறது. புத்தாடைகள், இனிப்புகள் என மக்கள் ஈகைத் திருநாளை வரவேற்க தயாராகிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் புதிய முயற்சி ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட், மிர்திஃப் சிட்டி சென்டரில் உள்ள பேபி ஷாப் ஆகிவற்றுடன் இணைந்து RTA இந்த திட்டத்தை செயல்படுத்திவருகிறது. ஈத் அல் அத்ஹாவிற்கான புத்தாடை, பரிசுகள் மற்றும் கிஃப்ட் வவுச்சர் ஆகியவை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன.

RTA பணியாளர்கள், பேபி ஷாப் ஊழியர்கள் ஆதவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகளை எடுக்க உதவி செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட் -ன் அரவணைப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு RTA கிஃப்ட் வவுச்சர்களை வழங்கியது.

இதுகுறித்துப் பேசிய RTA வின் பெருநிறுவன உதவி சேவைகள் துறையின் சந்தைப்படுத்துதல் மற்றும் பெருநிறுவன தகவல்தொடர்பு இயக்குனர் ரவ்தா அல் மெஹ்ரிசி,” ஈகையின் மூலமாக குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே இந்த பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கோடு RTA பல சமூக, மனிதாபிமான மற்றும் தொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது” என்றார்.

குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் பரிசுகளை தேர்ந்தெடுத்த RTA வின் தன்னார்வலர்களை ரவ்தா பாராட்டினார். போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் மக்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ உதவி செய்வதே தங்களது நோக்கம் எனவும் ரவ்தா குறிப்பிட்டார்.

RTA-officials-gift-clothes-to-orphans-for-Eid-Al-Adha-2021-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap