UAE Tamil Web

அரசுமுறைப் பயணமாக அமீரகம் வந்தார் பாகிஸ்தான் ஜனாதிபதி ; சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்த அமீரக அமைச்சர்..!

UAE

பாகிஸ்தான் ஜனாதிபதி டாக்டர். ஆரிப் அல்வி 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று அமீரகம் வந்தார். அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதியை அமீரகத்தின் நீதித்துறை அமைச்சர் அப்துல்லா பின் சுல்தான் பின் அவாத் அல் நுவைமி நேரில் சென்று வரவேற்றார்.

பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. துபாய் எக்ஸ்போவின் பாகிஸ்தான் பெவிலியனைத் துவங்கி வைக்க இருக்கும் ஆரிப் , அமீரகத்தில் வசித்துவரும் பாகிஸ்தான் மக்களை சந்திக்க இருக்கிறார்.

UAE
1 Share
Share via
Copy link