UAE Tamil Web

“இதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது” : 770 பேருக்கு அபராதம் விதித்த அபுதாபி காவல்துறை..!

Abudhabi police

அபுதாபியில் சக வாகனவோட்டிகள், சாலை உபயோகிப்பாளர்கள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் சப்தம் எழுப்பக்கூடிய வாகனங்களை இயக்கிய 770 நபர்களுக்கு அபுதாபி காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்த வீடியோ ஒன்றினை அபுதாபி காவல்துறை இன்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. முதியவர்கள், குழந்தைகள், வாகனவோட்டிகள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்கிய நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி போக்குவரத்து காவல்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

சாலை உபயோகிப்பாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்த செயலை ஒருபோதும் ஏற்க முடியாது என அபுதாபி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது புகாரளிக்க மக்கள் 999 என்ற எண்ணிற்கு காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் செய்யலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பொதுவாக இம்மாதிரியான குற்றங்களில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து சட்டத்தின் 20 வது பிரிவின் படி, அதிக சப்தம் எழுப்பக்கூடிய வாகனங்களை இயக்குபவர்களுக்கு 2000 திர்ஹம்ஸ் அபராதமும் 12 கரும்புள்ளிகளும் வழங்கப்படும் என காவல்துறை மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது.

Abudhabi police
0 Shares
Share via
Copy link