35.9 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

துபாயில் முதன் முறையாக வாடகை சைக்கிள் சேவை அறிமுகம்.!

Careem Bike

துபாய் முழுவதும் 780 சைக்கிள்கள் மற்றும் 78 மிதிவண்டி நிலையங்களை, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் கரீம் நிறுவனம் இணைந்து சைக்கிள் வாடகை சேவையை முதன்முதலில் தொடங்கியுள்ளது.

RTA-வின் இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டார் முகமது அல் டையர் மற்றும் கரீம்(Careem) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி முதசிர் ஷேக்கா ஆகியோர் கடந்த புதன்கிழமை (February 19 2020) ஜுமேரா லேக்ஸ் டவர்ஸின் வாடகை நிலையத்தில் இந்த புதிய சேவையைத் தொடங்கினர். இந்த பல கட்ட திட்டத்தின் (multi-phase project) முடிவில், துபாயில் 350 மிதிவண்டி நிலையங்களில் 3,500 மிதிவண்டிகளை கொண்டிருக்கும்.

அமீரகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர் பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் உத்தரவுகளின்படி, இந்த மிதிவண்டி பகிர்வு சேவை தொடங்கியுள்ளது என்று அல் டேயர் கூறினார்.

அத்துடன் துபாயின் மகுட இளவரசரும், துபாய் செயற்குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் அறிவுறுத்தலின் கீழ் இந்த திட்டம் வருகிறது. இது மக்களை, உடற்பயிற்சி மற்றும் சவாரி செய்ய மாற்று வழியாக சைக்கிள்களை பயன்படுத்த ஊக்குவிக்கிறது.

“இந்த சேவை நீடித்த முயற்சிகளுக்கு பங்களிக்கிறது மற்றும் குடியிருப்பாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க வழிவகுக்கிறது. மேலும் அவர்களுக்கு நகரம் முழுவதும் சென்று வர ஒரு புதிய போக்குவரத்து விருப்பத்தை வழங்குகிறது. மேலும் பலவகையான போக்குவரத்தை மக்களுக்கு வழங்கும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான RTA-வின் முயற்சிகளை இந்த சேவை ஆதரிக்கிறது ” என்று அல் டேயர் கூறினார்.

“இது துபாய் அரசாங்கத்தின், எரிசக்தி பயன்பாடு மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதற்கும், மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சூழலை வழங்குவதற்கும் மேற்கொள்ளும் ஒரு முயற்சியாக உள்ளது” என்று மேலும் அவர் கூறினார்.

ஷேக் முகம்மதின் வாழ்த்துக்கள்:

இது குறித்து ஷேக் முகமது கூறுகையில் “இந்த பகுதியில் இதுவரை இல்லாத முதல் வகையான பல கட்ட திட்டத்தை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் சேவைகளை குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரே மாதிரியாக வழங்க எங்களுக்கு உதவிய மற்றும் இந்த முயற்சியை ஆதரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட அனைத்து சமூக பங்குதாரர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த திட்டத்தில் வெற்றியைக் கொண்டுவர RTA மேற்கொண்ட பெரும் முயற்சிகளையும் நாங்கள் பாராட்டுகிறோம்” என்றார்.

RTA உடனான அதன் 15 ஆண்டு ஒப்பந்தத்தின்படி, கரீம் (CAREEM) நிறுவனம் முதல் இரண்டு ஆண்டுகளில் 1,750 மிதிவண்டிகளை இயக்கி 175 நிலையங்களை நிறுவும். அதனை தொடர்ந்து, அவற்றை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 3,500 மிதிவண்டிகள் மற்றும் 350 மிதிவண்டி நிலையங்களாக உயர்த்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை சேவையின் கட்டம் 1

 • 780 மிதிவண்டிகள்
 • 78 மிதிவண்டி நிலையங்கள்

மொத்த முயற்சி

 • 3,500 மிதிவண்டிகள்
 • 350 மிதிவண்டி நிலையங்கள்

30 கிமீ வேகம் – மிதிவண்டிகளுக்கான அதிகபட்ச வேக வரம்பு

சைக்கிளை வாடகைக்கு எடுப்பது எப்படி?

 • கரீம் பைக் ஆப்-ஐ (CAREEM BIKE APP) பதிவிறக்கம் செய்யவும்.
 • மிதிவண்டியில் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மிதிவண்டியைத் திறக்கவும்.
 • பின்னர் ஆப்-லிருந்து 5 இலக்க குறியீட்டை அந்த நிலையத்தில் உள்ளிடவும்.

நீங்கள் எங்கு சவாரி செய்யலாம்?

 • சைக்களுக்காக நியமிக்கப்பட்ட தடங்கள்.
 • வாடகை சேவையின் கீழ் உள்ள பாதுகாப்பான சாலைகள்.

உள்ளடக்கிய சில பகுதிகள்:

 • துபாய் மெரினா (Dubai Marina)
 • ஜுமேரா கடற்கரை சாலை (Jumeirah Beach Road)
 • ஜுமேரா லேக் டவர்ஸ் (Jumeirah Lake Towers)
 • தி கிரீன்ஸ் (The Greens)
 • பார்ஷா ஹைட்ஸ் (Barsha Heights)
 • துபாய் நீர் கால்வாய் (Dubai Water Canal)
 • துபாய் மீடியா சிட்டி (Dubai Media City)
 • டவுன்டவுன் துபாய் (Downtown Dubai)
 • அல் குத்ரா (Al Qudra)
 • அல் கராமா (Al Karama)
 • அல் மன்கூல் (Al Mankhool)

ஸ்மார்ட் அம்சங்கள்:

> GPS வழியாக அவர்களின் சைக்கிள்களைக் கண்காணித்து, அதிக இடவசதி உள்ள இடங்களை எதிர்பார்க்கலாம்.

> சூரிய சக்தியில் இயங்கும் வாடகை மிதிவண்டி நிலையங்கள்.

> கரீம் பைக் ஆப் (CAREEM BIKE APP) மூலமே சைக்கிள்களை வாடகைக்கு எடுக்கவும் மற்றும் பணம் செலுத்தவும் முடியும்.

இதையும் படிங்க.!