UAE Tamil Web

அமீரகத்தைப் போட்டோ எடுங்க 50,000 திர்ஹம்ஸ் முதல் கார் உள்ளிட்ட பரிசுகளை வெல்லுங்கள் – அமீரக அரசின் அசத்தல் அறிவிப்பு..!

Photography06_16ea7df6cce_original-ratio

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வேர்ல்ட்ஸ் கூலஸ்ட் விண்டர் திட்டத்தினை (World’s Coolest Winter campaign) துவங்குவதாக அறிவித்திருக்கிறார். டிசம்பர் 20 – ஜனவரி 20, 2022 ஆம் தேதிவரையில் இந்தத் திருவிழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைமுன்னிட்டு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சர்வதேச புகைப்பட விருது அமைப்பு (HIPA) புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அமீரகத்தின் அழகை வெளிக்கொணரும் விதத்தில் புகைப்படம் எடுப்பவர்களுக்கு 50000 திர்ஹம்ஸ் முதல் கார் வரையிலும் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

அமீரகத்தின் குளிர்காலத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் கழிக்கவும் சுற்றுலாப் பயணிகளைக் கவரவும் கடந்த ஆண்டு முதல் முறையாக கூலஸ்ட் விண்டர் திட்டத்தினை துபாய் ஆட்சியாளர் துவங்கினார்.

புகைப்படப் போட்டி விபரம்

மொத்தம் 3 வகைகளில் புகைப்படப் போட்டி நடைபெறுகிறது. அவை

  1. ஒன் போட்டோ (One Photo)
  2. போர்ட்ஃபோலியோ (Portfolio)
  3. குடும்பப் புகைப்படம்

ஒன் போட்டோ (One Photo)

இந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். அமீரகத்தின் மலைகள், பாலைவனம், கடல், பள்ளத்தாக்குகள் மற்றும் எமிரேட்டுகளை ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். இதில் ஒவ்வொரு வகையிலும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த புகைப்படங்களுக்கு தலா 7,000 திர்ஹம்ஸ் பரிசு அளிக்கப்படும்.

முக்கியக் குறிப்பு: போட்டியாளர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #WorldsCoolestWinter என்ற ஹாஷ்டேக்குடன் தங்களது புகைப்படங்களை பகிர வேண்டும்.

புகைப்படங்களை அனுப்ப மற்றும் மேலும் தகவல்களுக்கு www.hipa.ae. என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

போர்ட்ஃபோலியோ (Portfolio) 

தொழில்முறை புகைப்படக் கலைஞர்களுக்கான இந்தப் பிரிவில்

  • உங்களது பார்வையில் எமிரேட்கள் (Emirates in Your Eyes)
  • எமிரேட்சின் வனப்பகுதிகள் (Emirates Wilderness)
  • எமிரேட்களின் முகங்கள் (Faces from Emirates)
  • எமிரேட்களின் வீதிகளில் வாழ்க்கை (Street Life in Emirates)

என்னும் தலைப்பில் புகைப்படங்கள் எடுக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் தலா 50,000 திர்ஹம்ஸ் பரிசு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை அனுப்ப மற்றும் மேலும் தகவல்களுக்கு www.hipa.ae. என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

கார் பரிசு

குடும்பங்களுடன் அமீரகத்தின் குளிர்காலத்தில் சுற்றுலா செய்பவர்களுக்காக போட்டி ஒன்றினையும் நடத்த இருக்கிறது அமீரக அரசு. அதன்படி குளிர்காலத்தில் குடும்பங்களுடன் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #WorldsCoolestWinter என்ற ஹாஷ்டேக்குடன் பகிர வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த புகைப்படங்களுக்கு குடும்பமாகச் செல்லக்கூடிய கார் பரிசாக வழங்கப்படும். இந்தப் பிரிவிற்கு புகைப்படங்கள் வந்துசேரவேண்டிய கடைசித் தேதி 31 ஜனவரி 2022.

Photography06_16ea7df6cce_original-ratio
9 Shares
Share via
Copy link