UAE Tamil Web

துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் ஆழமான நீச்சல் குளத்தில் “டைவ்” அடித்த துபாய் இளவரசர் – வைரலாகும் வீடியோ..!

sheikh hamdan dive

ரிஸ்க் எடுப்பதெல்லாம் ஜுஜுபி மேட்டர் என்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுடைய தில்லுக்கு தேர்வு வைக்க இருக்கிறது டீப் டைவ் துபாய் (Deep Dive Dubai). நாத் அல் ஷேபா – வில் அமைந்திருக்கும் இந்த டைவ் அடிப்பதற்கான உலகின் ஆழமான நீச்சல் குளம் பல்வேறு சாகசப் பிரியர்களை கவர்ந்திழுக்க இருக்கிறது.

குதிப்பதற்கு முன்னர் இதன் ஆழத்தை அறிந்துகொள்வது நல்லது மக்களே. 60.02 மீட்டர் (196 அடிகள்) ஆழமுள்ள இந்த நீச்சல் குளத்தில் 14 மில்லியன் லிட்டர் நீர் அடைக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் படிக்கும் நேரத்தில் டைவ் அடிப்பதற்கான உலகின் ஆழமான நீச்சல் குளம் இதுதான் என் கின்னஸ் அதிகாரிகள் சான்றிதழையும் கொடுத்துவிட்டார்கள்.

பிரம்மாண்ட சிப்பியின் வடிவத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளம் 1500 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும்.

மாஸ் காட்டிய இளவசரசர்

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இந்த ஆழமான நீச்சல் குளத்தில் டைவ் அடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

டீப் டைவ் துபாயில் பயிற்சி (Training at Deep Dive Dubai) எனத் தலைப்பிட்டு ஹம்தான் வீடியோவினைப் பகிர்ந்துள்ளார். மேலும்,” டீப் டைவ் துபாயில் முழு உலகமும் உங்களுக்காகக் காத்திருக்கிறது” எனவும் இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Fazza (@faz3)

இம்மாத இறுதியில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

sheikh hamdan dive
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap