துபாயின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் மண்ணை விட்டு மறைந்து இன்றோடு 31 ஆண்டுகள் ஆகின்றன. இதனை முன்னிட்டு துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தனது தாத்தாவும் முன்னாள் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் ரஷீத்தின் நினைவுநாளை முன்னிட்டு ஷேக் ஹம்தான் வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) October 7, 2021
ஷேக் ரஷீத்தின் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாக தனது மகனுக்கு ரஷீத் என ஷேக் ஹம்தான் பெயரிட்டது குறிப்பிடத்தக்கது.
