UAE Tamil Web

நீருக்குள் மூழ்கியவரை மீட்க துணிச்சலாக “டைவ்” அடித்த துபாய் இளவரசர் – வைரலாகும் வீடியோ..!

Hamdan-Rescus

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சமீபத்தில் தனது நண்பர்களுடன் வாட்டர் ஜெட் பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது இளவரசரின் நண்பரான நாசர் அல் நியாதி, பயிற்சியாளரின் அறிவுரைப்படி ஜெட்டை இயக்கிக்கொண்டிருந்தார். நீரில் இருந்து மேலே செல்ல நாசர் முயற்சித்தாலும் ஜெட் கீழ்நோக்கி வேகமாக செல்லத் துவங்கியது.

இதனால் நீருக்கடியில் வேகமாக நாசர் இழுத்துச்செல்லப்பட, கரையில் நின்றுகொண்டிருந்த இளவரசர் இதைக்கண்டதும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக நீருக்குள் குதித்த அவர், விரைந்து சென்று நாசரை தண்ணீரின் மேற்புறத்திற்கு அழைத்துவந்தார்.

வெளியே வந்த நாசர், இளவரசரை கட்டியணைக்கும் காட்சி அனைவரையும் நெகிழச்செய்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

Hamdan-Rescus
3 Shares
Share via
Copy link