அமீரகத்தின் துணை தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், இந்த ஆண்டு கொடி நாள் கொண்டாட்டங்களை கோவிட் -19 தொற்றுடன் போராடும் ஃப்ரன்ட்லைன் ஹீரோக்களுக்காக (களப்பணியாளர்களுக்காக) அர்ப்பணித்துள்ளார்.
அமீரக கொடி தினத்தையொட்டி முகமது பின் ரஷீத் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொடி நாள் நிகழ்வில் பங்கேற்ற ஷேக் முகமது, அமீரக கொடியை ஏற்றினார். பின்னர் பேசிய அவர், ” இந்த ஆண்டு கொடி நாள் என்பது சமுதாயத்தால் காட்டப்படும் ஒற்றுமையையும், ஒத்துழைப்பின் உணர்வையும் கொண்டாட கிடைத்த வாய்ப்பாகும். தொற்றுநோயின் தாக்கத்தை குறைக்க கோவிட் -19 -க்கு எதிரான போராட்ட களத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்”என்று கூறினார்.
يرتفع علمنا، فيرتفع فخرنا .. ترفرف راياتنا، ومعها ترفرف في ساحات العز أمجادنا .. تقف شامخة سوارينا، لتعبر عن شموخ وعزة شعبنا .. تحلق في السماء أعلامنا .. ومعها تحلق أرواح شهدائنا التي سالت دفاعاً عنها .. #يوم_العلم pic.twitter.com/1NlO0Kd5Di
— HH Sheikh Mohammed (@HHShkMohd) November 3, 2020
மேலும் ஃப்ரன்ட்லைன் ஹீரோக்களின் முயற்சிகளையும், அர்ப்பணிப்பையும் நாடு மிகவும் பாராட்டுகிறது. பல்வேறு சமூகங்களின் நலனை உறுதிப்படுத்த உதவிய தன்னார்வலர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம் அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஒற்றுமைக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளனர்.
அவர்கள் இந்த நாட்டிற்கான தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர் மற்றும் சவால்களை சமாளிக்க குழு உணர்வோடு செயல்பட்டுள்ளனர். இதனால் நமது வளர்ச்சி முயற்சிகளை புதுப்பித்து பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற முடியும் என்று ஷேக் முகமது பெருமிதம் தெரிவித்தார்.