கடந்த இரண்டு தினங்களாக ராஸ் அல் கைமா மற்றும் புஜைராவில் கனமழை பெய்கிறது. இதனால் சாலைகள், மலைப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துவருகிறது. எதிர்பாராமல் கொட்டித் தீர்க்கும் இந்த மழையினால் வாகனவோட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சாலைகளில் தேங்கிநிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நகராட்சிப் பணியாளர்கள் இரவும் பகலுமாக உழைத்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
وادي الحيل #الفجيرة #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس #خليفة_ذياب pic.twitter.com/NP2CXYZCeu
— المركز الوطني للأرصاد (@NCMS_media) November 20, 2020
ராஸ் அல் கைமா மற்றும் புஜைராவின் அமலாக்கத்துறை அதிகாரிகள் பொதுமக்களை கவனமுடன் செயல்படுமாறும் மலைப்பகுதிகள் வழியே செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
கனமழை காரணமாக சாலை கண்களுக்குப் புலப்படுவதில் சிரமம் ஏற்படும் என்பதாலும் சாலைகளில் வழுக்கும் தன்மை அதிகரிக்கும் என்பதாலும் கூடுதல் எச்சரிக்கையுடன் வாகனவோட்டிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
وادي مي #الفجيرة #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس #جمعة_القايدي #عواصف_الشمال pic.twitter.com/P7vHKmN3Xl
— المركز الوطني للأرصاد (@NCMS_media) November 20, 2020
நாளை காலை கடலோரப்பகுதிகளில் ஈரப்பதம் அதிகரிக்கும் என தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. காற்றானது தென்கிழக்கிலிருந்து வடகிழக்கு நோக்கி மணிக்கு 15-25 கிலோமீட்டர் வேகத்திலும் அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடலில் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் இருக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.
A chance of convective clouds formation over the eastern coasts and northern areas associated with rainfall.
Motorists are advised to drive carefuly due to slippery roads and to stay away from valleys and dams.#CommitToWin pic.twitter.com/pgZ7d41NtE— NCEMA UAE (@NCEMAUAE) November 20, 2020