அபுதாபியில் கோர விபத்து.! லாரி மீது பேருந்து மோதியதில் 6 பேர் பலி.! 19 பேர் காயம்.!

ABUDHABI ACCIDENT

அபுதாபியில் பயணிகள் பஸ் ஒன்று லாரி மீது மோதியதில் 6 பேர் மரணமடைந்தனர் மற்றும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

அல் ரஹா கடற்கரை தெருவில் இன்று (JANUARY 16 2020) விடியற்காலை இந்த விபத்து ஏற்பட்டதாக அபுதாபி போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த லாரி முன்பு கட்டுப்பாடின்றி மெதுவாக சென்ற மற்றொரு வாகன ஓட்டுனரின் பொறுப்பற்ற தன்மை, லாரி ஓட்டுனரை குழப்பியது. அந்த வாகனத்தை தாக்காமல் இருக்க திடீரென லாரியை நிறுத்த வேண்டிய கட்டாயம் லாரி ஓட்டுனருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பின்னால் வந்த,  பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று லாரியின் மீது வேகமாக மோதியதில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

விடியற்காலையில் நடந்த இந்த விபத்து குறித்து போலீஸ் செயல்பாட்டு அறைக்கு அந்நேரமே தெரிவிக்கப்பட்டதாக வெளி பகுதிகளுக்கான போக்குவரத்துத் துறையின் போக்குவரத்து புலனாய்வுத் துறைத் தலைவர் லெப்டினன்ட் கேணல் முகமது அப்துல் ரஹீம் அல் ஹோசானி தெரிவித்தார்.

மேலும் காயமடைந்தவர்களை மீட்க உடனடியாக போலீஸ் ரோந்து வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. காயமடைந்த 19 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Loading...