நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வானுயர வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதனை மக்கள் சேவைக்காக பயன்படுத்துவதில் அமீரக அரசு கில்லாடி. ட்ரோன்களை கொண்டு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு வேலைளை செய்து வரும் அபுதாபி அரசு, தற்போது அதனை மருத்துவ பயன்பாட்டிற்கு மாற்ற முடிவு செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் மருத்துவமனைகளுக்கிடையே மருந்துகள், தடுப்பூசி, ரத்தம் உள்ளிட்டவற்றை வேகமாக பரிமாறிக் கொள்ள ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. உடற்பரிசோதனை சாம்பிள்கள், முக்கிய பொருட்களையும் மருத்துவமனைகளுக்கு இந்த ட்ரோன்கள் பத்திரமாக கொண்டு சேர்க்கும்.
دائرة الصحة-أبوظبي، بالشراكة مع الهيئة العامة للطيران المدني وشركة “SkyGo”، تطلق مشروع شبكة نقل المستلزمات الصحية باستخدام طائرات بدون طيار، التي تربط مستشفيات العاصمة وتسهل توصيل المستلزمات الطبية عبر المنشآت الصحية في مدة لا تتجاوز 15 دقيقة، تعزيزاً لجهود الحفاظ على حياة المرضى pic.twitter.com/Or53j4SwEb
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) September 22, 2021
நவீன முறையில் செயல்பட உள்ள இந்த ட்ரோன்களை அபுதாபி சுகாதாரத்துறை GCAA, SkyGo, Matternet ஆகியவையுடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்ள இருக்கிறது. இந்த நடைமுறை தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் அடுத்தாண்டு முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் ட்ரோனகளை மருத்துவ சேவைக்காக பயன்படுத்தும் முதல் நகரம் எனும் பெருமையை அபுதாபி பெற இருக்கிறது.
