UAE Tamil Web

வீடியோ தொகுப்பு: அமீரகத்தில் கொட்டித்தீர்த்த கனமழை – காட்டாறு போலப் பாயும் மழை நீர்..!

rain (2)

அமீரகத்தின் மலைப்பிரதேசங்களான மஸாஃபி, தவ்யீன் மற்றும் புஜைராவின் வாதி அல் ஃபை ஆகிய இடங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதன் காரணமாக காட்டாறு போல மழைநீர் பாய்ந்தோடும் வீடியோவை தேசிய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ளது.

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பதிவாகியிருக்கிறது.

முன்னதாக மழை மேகங்கள் தென்படும் இடங்களில் மக்கள் நேரம் செலவிடவேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருந்தது. அதேபோல, வாகனவோட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்குமாறு அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.