UAE Tamil Web

வீடியோ: டேங்கர் லாரி மீது மோதிய கார் – பஸ்பமான வாகனங்கள்..!

Tanker_

துபாய்: ஷேக் முகமது பின் சயீத் சாலையில் ராஸ் அல் கோர் எக்சிஸ்ட் அருகே அபுதாபிக்குச் செல்லும் வழியில் நேற்று கார் மற்றும் டேங்கர் லாரி நேருக்குநேர் மோதியதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால் இரு வாகனங்களும் எரிந்து சாம்பலானதாக துபாய் சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து நேற்று அதிகாலை 12:06 மணிக்கு அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து 12.10 மணிக்கு அல் ரஷீதியா காவல்நிலையத்தினைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். 12.23 மணிக்கு தீயானது அணைக்கப்பட்டது. இதில் கார் முழுவதுமாக எரிந்து பஸ்பமானதாக சிவில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்த 3 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

எரியும் தன்மையுள்ள பொருட்களை ஏற்றிச்சென்ற லாரி விபத்திற்குள்ளானதால் கான்கிரீட் சாலை, டிவைடரில் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.