34.8 C
Dubai
July 11, 2020
UAE Tamil Web

துபாய் அதிகாரிகளால் மூன்று டன் போதை மருந்துகள் அழிக்கப்படும் வீடியோ.!

drugs

துபாய் போலீஸ் போதைப்பொருள் தடுப்புத் துறையுடன் (Dubai Police anti-narcotics department) இணைந்து துபாய் பொது வழக்கு விசாரணை துறையால், சுமார் மூன்று டன் போதை மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன.

ஜெபல் அலியில் அமைந்துள்ள துபாய் நகராட்சி அபாயகரமான கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த 2,929 கிலோ மருந்துகள் தீ வைத்து அழிக்கப்பட்டன. அவை அனைத்தும் 2017 முதல் 2019 வரை சுமார் 215 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகள் ஆகும். அவற்றில் திரவங்கள், மாத்திரைகள் மற்றும் பிற வடிவங்களும் இருந்தன.

சம்பவ இடத்தில் துபாய் அட்டர்னி ஜெனரல் இசம் இசா அல் ஹுமாய்டன் கலந்து கொண்டு “தீங்கு விளைவிக்கும் பொருள்களை அப்புறப்படுத்துவது என்பது சட்ட விதிமுறைகளையும் நீதித்துறை தீர்ப்புகளையும் அமல்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தை பாதுகாக்க உதவுவதற்கும் பொது வழக்கு விசாரணையின் ஒரு முக்கிய மூலோபாயம் (Main Strategy) ஆகும்” என்று கூறினார்.

“அதிகாரிகளின் அனைத்து திறன்களும் வளங்களும் வேரூன்றி, இதுபோன்ற போதை மருந்து விற்பனையாளர்களையும் அதனை விலை கொடுத்து வாங்கும் பாதசாரிகளையும் கண்டுபிடித்து, அவர்களை நீதிக்கு முன் கொண்டு வர வேண்டும். மேலும் போதைப்பொருள்களின் ஆபத்து குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று மேலும் அவர் அதிகாரிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கூறினார்.

அத்துடன் தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கண்டுபிடித்து, அவற்றை குறைப்பதில் போதைப்பொருள் தடுப்புத் துறையின் முயற்சிகளையும் அட்டர்னி ஜெனரல் பாராட்டினார்.

இதையும் படிங்க.!