UAE Tamil Web

“உங்களுடைய மகன்கள் எனக்கும் மகன்கள் தான்”- முன்னாள் பணியாளருக்கு அபுதாபி இளவரசரிடம் இருந்துவந்த போன்கால் – வைரலாகும் வீடியோ..!

phone

ஈத் அல் பித்ர் அன்று அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், சலீம் அல் ஹன்ஜெரி அல் தாமணி மற்றும் அவருடைய தந்தைக்கு போன் மூலமாக வாழ்த்துத் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

தாமணியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த இளவரசர், “உங்களுடைய மகன்கள் எனக்கும் மகன்கள் தான், அவர்கள் இந்த தேசத்தை பெருமைகொள்ளச் செய்திருக்கிறார்கள்” என்றார்.

போனில் பேசிய சலீமின் தந்தை,”நாங்கள் எங்களுடைய குழந்தைகளுக்கு கல்வியையோ, நல்ல உணவையோ வழங்க முடியவில்லை. மறைந்த ஷேக் சயீத் அவர்கள் அதனை நிகழ்த்திக்காட்டினார்கள். அவருடைய காலத்தில் வாழ்ந்ததை நினைத்து பெருமைகொள்கிறோம். அவருடைய ஆன்மாவை வாழ்த்துகிறேன். பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அவரது குடும்பம் நீடூடி வாழ வாழ்த்துகிறேன்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “என்னுடைய குழந்தைகள் அனைவரும் உங்களுடைய மற்றும் தேசப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். அதுவே எங்களது லட்சியம்” என்றார். இதற்குப் பதிலளித்த இளவரசர்,”நீங்கள் உங்களுடைய கடமையை செய்து அதன்மூலம் எங்களை பெருமைகொள்ளச் செய்திருக்கிறீர்கள்” என்றார்.

நாட்டின் குடிமக்களுக்கு இளவரசர் இப்படி நேரடியாக போன் செய்து பேசுவது வழக்கமான ஒன்றுதான். சமீபத்தில் ஷார்ஜாவின் ஐமேக்ஸ் வாகன பராமரிப்பு நிலையத்தினை நடத்திவரும் ஹுதா அல் மட்ரோஷி (36) அவர்களுக்கு போன்மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

அதேபோல, போக்குவரத்துக் காவலர் அல் ஹசன் அல் ஹம்மாடி என்பவருக்கும் போன் மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.