நாளை (நவம்பர் 18) ஓமான் தனது 51 வது தேசிய தினத்தைக் கொண்டாட இருக்கிறது. இதனையடுத்து அமீரக ஆட்சியாளர்கள் ஓமான் ஆட்சியாளருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டர் பக்கத்தில்,”மதிப்பும் புகழும் பெற்று ஓமான் விளங்கிட கடவுள் ஆசிர்வதிப்பாராக” எனக் குறிபிட்டுள்ளார்.
மேலும் ஓமான் சுல்தான் ஹைத்தம் பின் தாரிக் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஷேக் முகமது.
نبارك لسلطنة عمان الشقيقة قيادة وشعباً عيدهم الوطني الواحد والخمسين. نبارك لأخي السلطان هيثم بن طارق حفظه الله المسيرة المباركة للنهضة العمانية المجيدة. أدام الله على شعب عمان مجده وعزه وسؤدده. وكل عام وأنتم بخير وأمان واستقرار. pic.twitter.com/EbPfHGRchw
— HH Sheikh Mohammed (@HHShkMohd) November 17, 2021
அமீரகத்தின் துணைப் பிரதமரும் நிதியமைச்சரும் ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டர் பக்கத்தில்,” இருநாடுகளும் ஆழமான உறவைக் கொண்டுள்ளன. நம்முடைய பொதுவான வரலாறு நம்முடைய ஒற்றை இலக்கினைக்கொண்ட பயணத்தோடு இணைந்திருக்கிறது. இருநாட்டு மக்களும் சகோதரத்துவத்துடனும் அன்புடனும் வாழ இருநாட்டு உறவுகள் பாதை சமைத்திருக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது ட்விட்டர் பக்கத்தில்,” அமீரகம் – ஓமான் இடையேயான ஆழமான நட்பு நாள்தோறும் வளர்ச்சிபெற்று வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
